மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஆலங்குடி அருகே மழை வேண்டி பெண்கள் நூதன வழிபாடு

ஆலங்குடி அருகே மழை வேண்டி கிராம பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:50 am

ஆலங்குடி அருகே மழை வேண்டி கிராம பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆலங்குடியில் ஆற்றுப்பாசனம் இல்லாததால் குளங்கள், ஏரிகள்,  ஆழ்குழாய் கிணறுகளை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. மேலும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, சோளம், கடலை, பூ உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  
இந்நிலையில், ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி பகுதி பெண்கள் அங்குள்ள புதுக்குளத்தில் மணலில் மனித உருவத்தை செய்து, அதற்கு படையலிட்டு ஒப்பாரி வைத்து அழுது மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.