பொன்னமராவதி வட்டார வள மையம் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா. வனஜா எந்தவித முன்னறிவுப்புமின்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடக்கமாக வட்டார வள மையத்தின் வைப்பறை, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அறை, கழிப்பறை, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் அறை ஆகியவற்றைப் பார்வையிட்டார். தொடர்ந்து ஆசிரியர் பயிற்றுநர்களின் நகர்வுப் பதிவேட்டினைப் பார்வையிட்டு அதில் குறிப்பிட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, நகர்வுப் பதிவேட்டில் உள்ளபடி ஆசிரியர் பயிற்றுநர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார்களா என ஆய்வு செய்தார். மேலும், ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து பார்வையிட அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகளுக்காக நடைபெறும் பகல்நேர பாதுகாப்பு மையத்தைப் பார்வையிட்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் மைய ஆசிரியை பொன்னம்மாள், உதவியாளர் அம்சவள்ளி ஆகியோரைப் பாராட்டினார். தொடர்ந்து உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பழனிவேலு, பொன்னமராவதி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே. ராமதிலகம், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


