வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நெம்மகோட்டையில் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:35 am

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெம்மகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
நெம்மகோட்டை சித்திவிநாயகர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி தலைமையில் சார் ஆட்சியர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் புதுகை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட  மாவட்டங்களைச் சேர்ந்த 721 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 
சீறிப்பாய்ந்த காளைகளை 204 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி அடக்க முயன்றனர். அப்போது, காளைகள் முட்டி காயமடைந்த  5 பேருக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 2 பேர் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அப்துல் முத்தலீப் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.