புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்சாரம் வழங்க வலியுறுத்தி, இரு இடங்களில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் படிப்படியாக வழங்கப்பட்டு வந்தது. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சீரமைப்புப் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு வந்த மின்வாரியத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதால் பணிகள்மீண்டும் முடங்கின.இதனால் பல கிராமங்கள் இன்னும் முழுமையான மின் விநியோகத்தை பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆலங்குடி அருகிலுள்ள மாங்காடு ஊராட்சி வாணியர்தெரு மக்கள் மின்சாரம் வழங்க வலியுறுத்தி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸார், மின்வாரியத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத்
தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்துச் சென்றனர். இதனால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபோல, , மாங்கோட்டை ஊராட்சி நம்பன்பட்டியில் மின்விநியோகம் வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் ஆலங்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச்செய்தனர். இதனால்,ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கந்தர்வகோட்டை பகுதியில் : புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கந்தர்வகோட்டை ஒன்றியம், மட்டங்கால் கிராம மக்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.இதுபோல, அண்டனூர் ஊராட்சி மஞ்சம்பட்டி கிராம மக்கள் நிவாரணம் மற்றும் மின் விநியோகத்தை முறையாக வழங்க வேண்டும் எனக் கோரி , கந்தர்வகோட்டை - கறம்பக்குடி சாலையில் மஞ்சம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இவ்விரு மறியல் குறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை போலீஸார் அப்பகுதிக்குச் சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் வன்கொடுமை.. தில்லி உயர்நீதிமன்றம் அளித்த காட்டமான பதில்!
லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


