இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

பேருந்து மோதி  தொழிற்பயிற்சி மாணவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:38 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் தொழிற்பயிற்சி மாணவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், பல்லாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் தமிழ்வாணன்(22). இவர், திருச்சியில் உள்ள பொக்லைன் இயக்குவதற்கான தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றுவந்துள்ளார். இவருக்கு, அந்தப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கீழாத்தூரில் பொக்லைன் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், திங்கள்கிழமை காலை கீழாத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 
இவர், மேலாத்தூர் நீரேற்று நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வடகாடு போலீஸார்  வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநரான கீரனூர் பகுதியைச் சேர்ந்த ஆர்.மோகன்ராஜை(35) கைது செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.