ரஜினி, கமலின் வருகை ஆரோக்கியமானது
ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது என்றார் நடிகர் பார்த்திபன்.


ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது என்றார் நடிகர் பார்த்திபன்.
புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறன. நடிகர்கள் என்பதற்காக அவர்களை ஒதுக்க நினைக்கக் கூடாது. தமிழகத்தில் கருத்து மோதல் ஏற்படுவதாலே பிரச்னைகள் ஏற்படுகிறது.
அதனால் மக்கள் குழப்பமடைகின்றனர். ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வருவதுதான் தற்போது பிரச்னையாக பார்க்கப்படுகிறது.
மக்களின் கவனம் உடனே நடிகர்கள் பக்கம் திரும்புவதாலே நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
மக்களின் கவன ஈர்ப்பு வாக்காக மாறுமா என்பது தெரியவில்லை. சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலில் தோல்வியடைந்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். போல மக்கள் பிரச்னைகளை கையாண்டு நிற்கவும் முடியும். தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அதை யார் நிரப்ப வந்தாலும் வரவேற்க வேண்டும் என்றார் பார்த்திபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...