வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

கந்தர்வகோட்டை அருகே ஆடுகளை கொன்ற மர்ம நபர்களுக்கு வலை

கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

Updated On :23 ஜூலை 2018, 8:57 am IST

கந்தர்வகோட்டை அருகே விவசாயிக்கு சொந்தமான 2 ஆடுகள் வெட்டிக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் இளங்கோவன்(55). விவசாயியான இவர் இருபது ஆடுகளை வளர்த்து வந்தார். வழக்கம் போல சனிக்கிழமை இரவு ஆடுகளை வீட்டின் அருகில் உள்ள பட்டியில் அடைத்து வைத்து விட்டு  வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று விட்டார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இளங்கோவனுக்குச் சொந்தமான இரண்டு ஆடுகள் வெட்டப்பட்டு இறந்து கிடந்தது. மற்ற ஆடுகள் அப்பகுதியில் நின்றிருந்தன.  இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸில் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், ஆடுகளை கொன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.