வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மே 17-இல் கந்தர்வகோட்டையில் ஜமாபந்தி தொடக்கம்

கந்தர்வகோட் டை வட்டத்தில் வருகிற வியாழக்கிழமை (மே 17) ஜமாபந்தி தொடங்குகிறது.

News image
Updated On :14 மே 2018, 10:40 pm

DIN

கந்தர்வகோட் டை வட்டத்தில் வருகிற வியாழக்கிழமை (மே 17) ஜமாபந்தி தொடங்குகிறது.
இதுகுறித்து கந்தர்வகோட்டை வட்டாட்சியர் க. பொன்மலர் வெளியிட்ட அறிக்கை:
வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெறுகிறது. முதல் நாளான வியாழக்கிழமை புதுநகர் உள் வட்டத்திற்குள்பட்ட மஞ்சப்பேட்டை, புதுநகர், அரியாணிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புனல்குளம், பிசானத்தூர், வீரடிப்பட்டி, முதுகுளம், குளத்தூர், பெரியக்கோட்டை, புதுப்பட்டி, நடுப்பட்டி, நம்புரன்பட்டி, சேவியர்குடிகாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். இரண்டாம் கட்டமாக, மே 22-இல் கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்குள்பட்ட மட்டாங்கால், காட்டுநாவல், சுந்தம்பட்டி, நெப்புகை, சங்கம்விடுதி, துவார், கல்லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, அண்டனூர், ஆத்தங்கரைவிடுதி ஆகிய கிராமங்களுக்கும், மே 23ஆம் தேதி கந்தர்வகோட்டை உள்வட்டத்தில் உள்ள குரும்பூண்டி, தச்சங்குறிச்சி, மலையடிப்பட்டி, விராலிப்பட்டி, நொடியூர், கோமாபுரம், வடுகப்பட்டி, அரவம்பட்டி, கோவிலூர், சோத்துப்பாளை, மெய்க்குடிப்பட்டி, மங்கனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் ( ஜமாபந்தி ) நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிகள் மாநாடு நடைபெறுகிறது. கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம், தங்களது பகுதிக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.