மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அரசுப் பள்ளியில் வாசிப்பு அரங்கம்

கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வாசிப்பு அரங்கம் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:18 am

கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வாசிப்பு அரங்கம் நடைபெற்றது.
 கீரமங்கலம்  அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவியல் சார்பில்  புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்த மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக வாசிப்பு அரங்கம் நடைபெற்றது. 
நிகழச்சிக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர் அலி தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மணவாளன், த.மு.எ.க.ச. மாவட்ட துணைத்தலைவர் ரமா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தியாகு வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அறிவியல் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களிடம் பேசினார். 
நிகழ்ச்சியில், 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பலரும் அறிவியல் சார்ந்த புத்தகங்களை அதிகமாக வாசித்தனர். வாசிப்பு அரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில், அறிவொளி கருப்பையா, அறிவியல் இயக்கத்தின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.