தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் பிரச்னை

அறந்தாங்கியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

Published On :31 ஜனவரி 2024, 12:33 pm IST


அறந்தாங்கியில்  ஞாயிற்றுக்கிழமை மாலை இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதில் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர் ஏ.அஜ்மீர் அலி, ஞாயிற்றுக்கிழமை மாலை  இறந்துவிட்டார். இறப்புக்கு முன்பு அவரது உடலை  அமைப்பின் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், அவரது உறவினர்கள் மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், அறந்தாங்கி தலைவரை அணுகி, அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திங்கள்கிழமை அவர்களுக்கான மயானத்தில் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டது.  
தொடர்ந்து, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் க.பஞ்சவர்ணம், இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்படாததால், அந்த அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை காலை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.  இதனால் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.