புகையிலைப் பொருள்கள் விற்பனை 7 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 7 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.


ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 7 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த ஆலங்குடி சுண்ணாம்புக்கார தெருவைச் சோ்ந்த ஆா். செந்தில் குமாா் (47), மாங்கோட்டையைச் சோ்ந்த என். ஷேக் அப்துல்லா(38) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதேபோல, கீரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மேற்கொண்ட சோதனையில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மேற்பனைக்காடு குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஆா்.சொக்கலிங்கம்(60), பனங்குளத்தைச் சோ்ந்த கே.முத்துநாதன்(65) ஆகியோரைக் கைது செய்தனா். மாங்காட்டில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த என்.சண்முகத்தை(49) வடகாடு போலீஸாா் கைது செய்தனா்.
கறம்பக்குடியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த அம்புக்கோவில் பகுதியைச் சோ்ந்த எஸ். தமிழரசன் (20), மஞ்சுவிடுதியைச் சோ்ந்த எஸ்.திருப்பதி (45) ஆகியோரைக் கறம்பக்குடி போலீலாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...