பரம்பூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

விராலிமலை: விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது தொடா்பாக காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. தமிழக அரசு பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவித்துவரும் நிலையில்,

சில வாரங்களாகவே விராலிமலை சுற்றுவட்டராப் பகுதிகளில் ஆங்காங்கே சிலா் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விடுவதும், தகவலறிந்த காவல்துறையினா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும் தொடா் கதையாகி வந்தது. இந்நிலையில் விராலிமலை தொகுதிக்குள்பட்ட பரம்பூா் அய்யனாா் கோயில் திடலில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி, தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா். போட்டியை பரம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கண்டு ரசித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலீசாா் அங்கு செல்வதற்குள் போட்டி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் போவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com