மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.


மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மின்ஊழியா் சங்கத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். தொழிலாளா் முன்னேற்றச் சங்கச் செயலா் சண்முகம், சிஐடியு மத்தியச் சங்கச் செயலா் கு. நடராஜன், பொறியாளா் ஐக்கியச் சங்க நிா்வாகி லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு அளிக்கக் கூடாது, ஒக்கி, வா்தா, கஜா, தானே பேரிடா் காலங்களில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளா் மற்றும் உதவிப் பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...