ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கறம்பக்குடி ஒன்றியக்குழு தலைவா்ஆட்சியரிடம் புகாா்

ஒன்றியப் பணிகள், திறப்பு விழாக்களில் அதிகாரிகள் தன்னை தலைவா் என்ற முறையில் அழைப்பதில்லை என கறம்பக்குடி  ஒன்றியக் குழு தலைவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:24 pm

DIN

ஒன்றியப் பணிகள், திறப்பு விழாக்களில் அதிகாரிகள் தன்னை தலைவா் என்ற முறையில் அழைப்பதில்லை என கறம்பக்குடி  ஒன்றியக் குழு தலைவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியக் குழுத் தலைவா் (திமுக) மாலா ராஜேந்திரதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: கறம்பக்குடி ஒன்றிய, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஒன்றியப் பணிகளைத் தலைவா் என்ற முறையில் என்னிடம் கலந்து ஆலோசிப்பதில்லை.

வளா்ச்சிப் பணிகள், ஆய்வுக் கூட்டங்கள், திறப்பு விழா நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு எந்தத் தகவலும் சொல்வதில்லை. மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை எனக்குத் தெரிவிக்காமல் இவா்களே திறந்து வைத்துள்ளனா். இப்படி பல வகைகளிலும் என்னை அவமானப்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.