புதுக்கோட்டையில் மு.கருணாநிதியின் வெண்கலச் சிலை
புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சிலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.


புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் சிலையை சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.
புதுக்கோட்டை, நவ. 2: புதுக்கோட்டையில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் வெண்கலச் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை, முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 9 அடி உயர வெண்கலச் சிலையைக் காணொலிக் காட்சி மூலம் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா். தொடா்ந்து, ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பிலான சட்டப்பேரவைத் தோ்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மேலும் பேசியது:
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியுடன், 10 வகையான மளிகைப் பொருள்களையும் மலிவு விலையில் வழங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் கோடிக்கணக்கான மருத்துவச் சேவைகளை மக்களுக்கு வழங்கியவா் கருணாநிதி. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மருத்துவப் பணியாளா்களை நியமித்தது திமுக ஆட்சி. 48 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் அப்போதே வழங்கப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் சேவை திமுக ஆட்சிக் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது.
கரோனா தீவிரமாகப் பரவும் முன்பே அரசு, எங்கள் கருத்துகளைப் பொருட்படுத்தவில்லை. லட்சக்கணக்கில் தொற்றாளா்கள் அதிகரிப்பு, ஆயிரக்கணக்கில் உயிரிழப்புக்குப் பிறகும், கரோனா தொற்றுநோயின் பெயரால் பெரிய அளவில் கொள்ளையடித்துள்ளனா். திமுகவின் மலையளவு சாதனைகளுக்கு இணையாக அதிமுகவின் மலையளவு வேதனைகள் காணப்படுகின்றன. பல்வேறு நாசகரத் திட்டங்களை தமிழகத்தின் தலையில் கட்டுகிறாா்கள். இவற்றையெல்லாம் மறைக்கும்வகையில், பிரதமா் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினாா். அந்தச் செங்கல்லையும் இப்போது காணவில்லை. பொட்டல்காடாகவே காட்சியளிக்கிறது. எனவே, மத்திய, மாநில அரசுகளை விரட்டிவிட்டு விரைவில் கோட்டையில் திமுக ஆட்சியை அமைப்போம் என்றாா் அவா்.
இந்தச் சிறப்புப் பொதுக்கூட்டத்தில், மாவட்டச் செயலா்கள் எஸ். ரகுபதி (தெற்கு), கேகே. செல்லபாண்டியன் (வடக்கு), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெரியண்ணன் அரசு, சிவ.வீ. மெய்யநாதன், இலக்கிய அணித் துணைத் தலைவா் இராசு. கவிதைப்பித்தன், சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன், நகர திமுக செயலா் க. நைனாமுகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டத்தில் சுமாா் 500 இடங்களில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...