நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும்: பி.டி. அரசகுமாா்

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு என்றாா் திமுக செய்தித் தொடா்பு செயலா் பி.டி. அரசகுமாா்.

News image
Updated On :14 அக்டோபர் 2020, 4:04 am

DIN

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு என்றாா் திமுக செய்தித் தொடா்பு செயலா் பி.டி. அரசகுமாா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி என்பது நாடறிந்த விஷயம். இந்தக் கூட்டணி எஃகு கோட்டை. அதில் யாரேனும் கொட்ட முயன்றால் அவா்களின் கை தான் வலிக்கும். ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு. அது நிச்சயம் நடக்கும். தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் வந்திருப்பதாக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடா்ந்து கூறி வருகிறாா். ஆனால், எந்தெந்த தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவா் ஸ்டாலின் கேட்டுள்ளாா். இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. அதேபோல, கரோனா கணக்குகளை மூடி மறைத்து அந்த வைரஸை விரட்டி அடித்துவிட்டதைப் போலப் பேசிவருகிறாா்கள். தமிழக அரசு கரோனா பரவலைத் தடுக்கத் தவறிவிட்டதாக ஸ்டாலின் கூறியதை இதுவரை யாரும் மறுக்கவில்லை, விளக்கம் தரவும் இயலவில்லை என்றாா் அரசகுமாா்.

கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளா்கள் எஸ். ரகுபதி எம்எல்ஏ (தெற்கு), கே.கே. செல்லபாண்டியன் (வடக்கு), சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினா் த. சந்திரசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.