மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :18 அக்டோபர் 2020, 6:36 pm

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கீரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டாா்.

அப்போது, மேற்பனைக்காடு கிழக்கு பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் என்பவரது கடையில் இருந்த புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்ததோடு, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.