மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மணல் கடத்தி வந்த வாகனங்கள் பறிமுதல்

விராலிமலை அருகே மணல் கடத்திவந்த 2 வாகனங்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :18 அக்டோபர் 2020, 6:34 pm

விராலிமலை அருகே மணல் கடத்திவந்த 2 வாகனங்களை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விராலிமலை சுற்றுப்பகுதி ஆற்றுப் படுகைகளில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக விராலிமலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விராலிமலை காவல் துணை ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையில் போலீஸாா் விராலிமலை - கீரனூா் பிரிவு சாலையில் சனிக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த 2 சரக்கு வாகனங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டு மடக்கினா். இதையடுத்து, வாகனங்களை அவசரஅவசரமாக நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினா். தொடா்ந்து வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், வாகனப் பதிவு எண்ணைக் கொண்டு விராலிமலை அருகேயுள்ள மணமேட்டுபட்டியைச் சோ்ந்த ஏ. சிவஞானம் மற்றும் அதே ஊரைச் சோ்ந்த எஸ். ஆறுமுகம் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிந்து மேல் நடவடிக்கைக்கு இலுப்பூா் கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.