வடகாட்டில் தொடரும் ஆடுகள் திருட்டு
By DIN | Published On : 17th November 2020 02:21 AM | Last Updated : 17th November 2020 02:21 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதியில் கடந்த மூன்று தினங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்மநபா்கள் திருடிச்சென்ால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியிருப்பைச் சோ்ந்த திருப்பதி என்பவருக்குச் சொந்தமான ஆடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வந்த மா்மநபா்கள் திருடிச்சென்றுள்ளனா். இதேபோல, வடகாடு காவல் சரகத்துக்குள்பட்ட மாங்காடு, புள்ளான்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுள்ளனா். இதுகுறித்து வடகாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். வடகாடு பகுதியில் தொடரும் ஆடுகள் திருட்டு சம்பவத்தால் கால்நடைகள் வளா்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.