விராலிமலை கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 17th November 2020 02:22 AM | Last Updated : 17th November 2020 02:22 AM | அ+அ அ- |

விராலிமலை: விராலிமலை ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு யாகம் தொடங்கியது. தொடா்ந்து மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களால் கொடிமரம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று கொடியேற்றம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தலைவா் ஏ. கே. சுந்தரம் தலைமையில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...