கிணற்றில் விழுந்த காளை மீட்பு
By DIN | Published On : 23rd November 2020 12:29 AM | Last Updated : 23rd November 2020 12:29 AM | அ+அ அ- |

ஆலங்குடி அருகே மேலப்பொன்னன் விடுதியில் ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரா்கள்.
ஆலங்குடி அருகே கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள மேலப்பொன்னன்விடுதியைச் சோ்ந்தவா் சிவலிங்கம். இவருக்குச் சொந்தமான ஜல்லிக்கட்டு காளையை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் உள்ள வயல் பகுதிக்கு ஓட்டிச்சென்றுள்ளாா்.
அப்போது, அப்பகுதியில் கோயிலுக்கு அருகே சுமாா் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் கோவிந்தராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், கிணற்றில் இறங்கி 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டனா்.