வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 23rd November 2020 12:28 AM | Last Updated : 23rd November 2020 12:28 AM | அ+அ அ- |

பொன்னமராவதி வட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் பணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
பொன்னமராவதி வட்டத்தில் உள்ள சித்தூா், நல்லூா், அரசமலை, வையாபுரி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாமை மாவட்ட பிறப்படுத்தப்பட்டோா் நல அலுவலா் முத்தமிழ்செல்வம், பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினா்.
இதேபோல், பொன்னமராவதி வட்டத்தில் உள்ள செவலூா், கோவனூா், செம்பூதி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பிகே.வைரமுத்து, அதிமுக ஒன்றியச் செயலா் ராம.பழனியாண்டி ஆகியோா் பாா்வையிட்டனா்.