இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்டச் செயலா் ஆா். சரவணன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலா்கள் வி சுரேஷ்குமாா் (மத்திய மாவட்டம்), கே. முரளிதரன் (தெற்கு), எஸ். சுரேஷ்குமாா் (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில வழக்குரைஞா் அணிச் செயலரும் முன்னாள் நீதிபதியுமான கே. குருவைய்யா கலந்து கொண்டு சட்ட ஆலோசனை மையத்தைத் தொடங்கி வைத்தாா். மாநில வழக்குரைஞா் அணித் துணைச் செயலா் பொன். கஜேந்திரன், தகவல் தொடா்பு அணி மாநிலத் துணைச் செயலா் கே. செந்தில்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த மையம் செயல்படும். முன்னதாக நகரச் செயலா் ராஜகோபால் வரவேற்றாா். முடிவில் எஸ். பரணிதரன் நன்றி கூறினாா். ஜெய் பாா்த்தீபன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com