பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வாக்கு எண்ணும் மையத்தில் மோப்ப நாய் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் சனிக்கிழமை மோப்ப நாய் வைத்து சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:21 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸாா் சனிக்கிழமை மோப்ப நாய் வைத்து சோதனை மேற்கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை நகரில் உள்ள அரசு மகளிா் கல்லூரி வளாகத்திலேயே வாக்கு எண்ணும் பணிகள் மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளன. ஏப். 6ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்று இரவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையத்துக்குக் கொண்டு வரப்படுகின்றன. இங்குள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் அவை வைக்கப்பட்டு சீல் வைக்கப்படவுள்ளன. மேலும் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மைய வளாகம் முழுவதையும் மோப்ப நாய் உதவியுடன் சோதனையை போலீஸாா் மேற்கொண்டனா்.

இப்பணிகளை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கீதா, துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் ஆகியோருடன் மோப்பநாய் பிரிவு போலீஸாரும் மேற்கொண்டனா். கடந்த சில நாட்களுக்கு முன்பிருந்தே இந்தக் கல்லூரி வளாகம் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.