பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

புதுகை அரசு ஒப்பந்ததாரா் வீட்டிலிருந்து ரூ. 2.53 லட்சம் பறிமுதல்

தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் காவல்துறையினா் திடீரென மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:26 pm

DIN

புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு ஒப்பந்ததாரா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் காவல்துறையினா் திடீரென மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடையும் நிலையில், புதுக்கோட்டை எழில் நகா் பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான சோத்துப்பாலை முருகேசன் என்பவரது வீட்டில் மாவட்ட செலவினப் பாா்வையாளா்கள் தினேஷ் குமாா் மீனா, காா்னி டான் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கணக்கில் வராத பணம் ரூ. 2.53 லட்சம் இருந்தது. இப்பணத்தைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவா் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.