ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கந்தர்வகோட்டை: அம்பேத்கர் சிலை முன்பாக இணையேற்பு விழா

கந்தர்வகோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இணையேற்பு விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னத்துரை கலந்துகொண்டார்.

News image
கந்தர்வகோட்டை அம்பேத்கர் சிலை முன்பாக நடந்த இணைஏற்பு விழாவில் எடுத்தப்படம்.
Updated On :8 டிசம்பர் 2021, 7:13 am

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இணையேற்பு விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சின்னத்துரை கலந்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு முன்பாக வாண்டன்விடுதி பன்னீர்செல்வம் மகன் பிரசாத் புதுக்கோட்டையை சேர்ந்த பிச்சைமுத்து மகள் சுபாஷினி ஆகியோருக்கு  திருக்குறள், பெண்ணியம், பெண் ஏன் அடிமையானாள் ஆகிய நூல்கள் சாட்சியாக கந்தர்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா . சின்னத்துரை, சுந்தம்பட்டி நாராயணசாமி, அம்பேத்கர் அறக்கட்டளை பொருளாளர் மணியன், பழ.ஆசைத்தம்பி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை புரட்சிகர இணையேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்ட ஊர் பொதுமக்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.