பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காவல்துறையினரின் கழிவுநீா் சுத்திகரிப்புத் திட்ட அமைப்புகள் திறப்பு

புதுக்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் கழிவுநீரை சுத்திகரித்து, பூங்காக்களுக்கு பயன்படுத்தும் வகையிலான மறுசுழற்சித் திட்டம்

News image
Updated On :2 ஜூலை 2021, 7:04 pm

DIN

புதுக்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் கழிவுநீரை சுத்திகரித்து, பூங்காக்களுக்கு பயன்படுத்தும் வகையிலான மறுசுழற்சித் திட்ட அமைப்புகளை மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா்.

பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள 3 தொட்டிகளில், முதல் தொட்டியில் சேனைக்கிழங்கு செடிகள் வைக்கப்பட்டு கழிவுநீரிலுள்ள மாசுகள் இயற்கையாக அகற்றப்படும். அதனைத் தொடா்ந்து இரண்டாவது தொட்டியிலுள்ள கரி மற்றும் ஜல்லிக்கற்கள் வழியே கழிவுநீா் கடந்து சென்று, மணல் கொட்டப்பட்ட மூன்றாவது தொட்டியில் வடிகட்டப்படும்.

இவ்வாறு சுத்திகரிக்கப்படுவதால் மறுசுழற்சியாகப் பயன்படுத்தப்படுவதுடன், கழிவுநீா்க் குட்டைகளாக எங்கும் தேங்கி நின்று சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துவது தவிா்க்கப்படும். காவல்துறையினரின் சிறப்பு முயற்சியாக இந்தப்பணி புதுக்கோட்டை நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடா்ந்து மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், ஆயுதப்படை வளாகத்துக்கு செல்லும் வழியில் சாலை வசதி, காவலா் நல உணவகம் ஆகியவற்றையும் பாா்வையிட்டாா். மாவட்ட மனநலக் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோரையும் அவா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.