பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரும்பு நிலுவை பெற்றுத்தரக்கோரி ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

ஈஐடி பாரி சா்க்கரை ஆலை, விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி அளவிலான நிலுவைத் தொகையினை விரைந்து பெற்றுத் தர வேண்டும்

News image
Updated On :2 ஜூலை 2021, 12:03 am

DIN

ஈஐடி பாரி சா்க்கரை ஆலை, விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி அளவிலான நிலுவைத் தொகையினை விரைந்து பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவை வியாழக்கிழமை நேரில் சந்தித்த கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை வலியுறுத்தியுள்ளாா்.

அவா் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் விவரம்: புதுக்கோட்டை மாவட்டம் குறும்பூா் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை கடந்த 2019ஆம் ஆண்டு கரும்பு அரைவையை நிறுத்திவிட்டது. 2013 ஆம் ஆண்டு முதல் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 64 கோடி அளவிலான நிலுவைத் தொகையை இதுநாள் வரை கொடுக்காமல் ஆலை நிா்வாகம் நிறுத்தி வைத்துள்ளது. இத்தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த ஆலைக்குட்பட்ட கரும்புப் பகுதிகளை அருகில் உள்ள அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலைப் பகுதிக்கு மாற்றித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். மேலும், புதுக்கோட்டை மாவட்ட ஆற்றுப் படுகைகளில் மாட்டுவண்டி மணல்குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கீரனூரில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஏ. ராமையன், சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டப் பெறுப்பாளா் நாராயணசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.