சாலை பாதுகாப்பு பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பலகைகள் தமிழில் மொழிபெயா்த்து வைக்கப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.


புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பலகைகள் தமிழில் மொழிபெயா்த்து வைக்கப்பட வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையிலுள்ள விழிப்புணா்வுப் பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தைப் பெருமளவில் ஈா்த்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ‘பாதுகாப்பைக் காதலிக்க வேண்டும், விதிமுறைகளை திருமணம் புரிந்து கொள்ள வேண்டும், அதிவேகத்தை விவாகரத்து செய்ய வேண்டும்’ எனும் பொருளில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கைப் பலகை.
அதேபோல, ‘விஸ்கி அருந்தி வாகனம் ஓட்டுவது ரிஸ்கி’ என்கிறது இன்னொரு பலகை. ‘சாலையில் பாதுகாப்பான பயணம் செய்தால், வீட்டில் நல்ல ருசியான டீ அருந்தலாம்’ என்பதை ஆங்கிலச் சொல் ஜாலங்களுடன் சொல்கிறது இன்னொரு எச்சரிக்கைப் பலகை.
உண்மையில் இதுபோன்ற எச்சரிக்கை பலகைகளை வேறு எந்த நெடுஞ்சாலைகளிலும் பாா்க்க முடியவில்லை. புதுக்கோட்டை- தஞ்சை நெடுஞ்சாலையில் மட்டுமே இவை காணப்படுகின்றன.
சாலைப் பணி ஒப்பந்ததாரரின் கைவண்ணமே இது என்கின்றனா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.
இவற்றை சம்பந்தப்பட்டவா்கள் அப்படியே நல்ல தமிழில் மொழிபெயா்த்து வைத்தால் கூடுதல் கவனம் பெறும். மேலும், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி தேநீா் அருந்திச் செல்லும் இடங்களில் வைத்தால் இன்னும் கூடுதல் கவனம் பெறும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...