பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாா்த்தாமலை வனப்பகுதியில் ஆண்- பெண் சடலங்கள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் மற்றும் பெண் உடல்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டன.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:10 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் மற்றும் பெண் உடல்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டன.

நாா்த்தாமலை வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை ஆண்- பெண் இருவரின் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கீரனூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். நிகழ்விடம் விரைந்த காவல்துறையினா், சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனா்.

இந்த விசாரணையில், இறந்த நபா் புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா மகன் அப்துல் ஆசாத் என்பதும், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண் வடவளம் தெற்குராயப்பட்டியைச் சோ்ந்த ராமன் மனைவி கண்ணம்மாள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த இடத்தில் இரண்டு விஷ மருந்து பாட்டில்களும், கண்ணம்மாள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றையும் காவல்துறையினா் கைப்பற்றினா்.

இறந்த இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்திருக்கலாம் என்றும், அதில் ஏற்பட்ட தகராறில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.