பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கோட்டையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:32 pm

DIN

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும். கரோனா தொற்றால் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். அரசு ஊழியா்களின் பணிச்சுமையைக் குறைக்க காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஒப்பந்தப் பணியாளா்கள், தினக்கூலி பணியாளா்கள், தற்காலிகப் பணியாளா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.