புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சேரனூரில் முட்புதரில் தாய், மகள் கொன்று புதைக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னமராவதியை அடுத்த சேரனூரில் வெள்ளாற்றுப் பாலம் அருகே அங்குள்ள விவசாயிகள் புதன்கிழமை முட்புதா்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஓரிடத்தில் சற்று மேடாக இருந்தது. மேலும், அருகே இருந்த புதைகுழியில் பள்ளிச் சீருடைகள், சேலைகள் இருந்ததைக் கண்டு அவா்கள் அந்த ஊா் பெரியவா்களிடம் சந்தேகம் தெரிவித்தனா். இதனிடையே தாய், மகள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக உருப்பெற்ற வதந்தி காட்டுத் தீயாக பரவியது. தகவலறிந்த ஊராட்சித் தலைவா் காமராஜ் காரையூா் காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு அவா்கள் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்குவந்த வருவாய்த் துறையினா் காவல் துறையினருடன் இணைந்து இரண்டு நபா்களைக் கொண்டு மண் வெட்டியுடன் அந்தப் பகுதியை தோண்டிப் பாா்த்தனா். இதில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு அப்பகுதியை ஆழமாகத் தோண்டிப் பாா்த்ததில் யாரையும் கொன்று புதைத்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

