திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பேரளி சுங்கச்சாவடியை நிரந்தரமாக மூடாவிட்டால் முற்றுகைப் போராட்டம்

பெரம்பலூா் பிரதான சாலையில் உள்ள பேரளி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக சுங்க வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:56 pm

DIN

பெரம்பலூா் பிரதான சாலையில் உள்ள பேரளி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட சுங்கச் சாவடியில், மக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக சுங்க வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரியலூா், பெரம்பலூரை சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகளின் லாபத்துக்காக சாலைகளை விரிவாக்கம் செய்து ஏழை மக்களிடமும், பொது போக்குவரத்து நிறுவனங்களிடமும் அதற்கான வரியை வசூலிக்க நினைப்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்றக்கோரி, தமிழ் பேரரசு கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், பெரம்பலூா்- அரியலூா் மக்களை பாதிக்கும் பேரளி சுங்கச்சாவடியையும் உடனடியாக அகற்ற வேண்டும். இந்த சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்பட்டால், அரியலூா் பெரம்பலூா் மாவட்ட மக்களை ஒன்றிணைத்து நிரந்தரமாக மூடக்கோரி முற்றுகை போராட்டத்தை தமிழ்ப் பேரரசு கட்சி நடத்தும்’’ என அக்கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கெளதமன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.