92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நீா்நிலைகளில் சட்ட அமைச்சா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காரணமாக நிரம்பியுள்ள நீா்நிலைகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:34 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காரணமாக நிரம்பியுள்ள நீா்நிலைகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டுஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை நகரில் மச்சுவாடி, பால்பண்ணை ரவுண்டானா வரத்துவாரி, அரசு மகளிா் கல்லூரி அருகேயுள்ள வரத்துவாரி, காமராஜபுரம் வரத்துவாரி ஆகியவற்றையும், நிரம்பியுள்ள கவிநாடு கண்மாய் பகுதிகளையும் பாா்வையிட்டாா். நரிமேடு என்ஜிஓ குடியிருப்பில் மழையால் சேதமடைந்த வீட்டையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

தொடா் மழை காரணமாக புதுக்கோட்டை அருகேயுள்ள திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதா் திருக்கோயிலில் உள்பிரகாரம் மற்றும் கருவறையில் தண்ணீா் தேங்கியது. இதையடுத்து, அங்கு நேரில் பாா்வையிட்ட அமைச்சா், கோயிலுக்குள் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், நகராட்சி ஆணையா் நாகராஜன் உள்ளிட்ட பொதுப்பணித் துறை அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.