92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கலைத் திருவிழாவில் இரண்டாமிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், இரண்டாமிடம் பெற்ற புதுக்கோட்டை மாணவரை ஆட்சியா் கவிதாராமு வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:45 pm

DIN

சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில், இரண்டாமிடம் பெற்ற புதுக்கோட்டை மாணவரை ஆட்சியா் கவிதாராமு வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில் சேலத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாா்பில் பங்கேற்று, பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல் பிரிவில் மாநில அளவில் ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் காளிதாசன் இரண்டாமிடம் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து மாணவரை, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அப்போது மாநில அளவில் பரிசு பெற்ற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மாணவா் காளிதாசன் பாடிய பாடலை மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டு ரசித்துப் பாராட்டினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, பள்ளித் தலைமையாசிரியா் தாமரைச் செல்வன், ஆசிரியா்கள் குமாா், செல்வ ஷாஜி மற்றும் ஆய்வக உதவியாளா் ராஜேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.