சேதமடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்த அமைச்சா் ரகுபதி
புதுக்கோட்டையில் மழையால் சேதமடைந்த தரைப்பாலம், குளங்களின் மதகுகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.


புதுக்கோட்டையில் மழையால் சேதமடைந்த தரைப்பாலம், குளங்களின் மதகுகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
கடந்த இரு நாள்களில் பெய்த கனமழையால் புதுக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட சின்னகணக்கன்பட்டியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்தது. அதேபோல, கைக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட விஜயரகுநாதபுரத்திலுள்ள ஆச்சான்குளத்தின் மதகுகள் சேதமடைந்தன.
இவற்றை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஆட்சியா் கவிதா ராமுவுடன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தரைப்பாலத்தையும், மதகுகளையும் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களை அமைச்சா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...