92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொழில்நுட்பக்குழு கூட்டம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்

 புதுகையில் நடைபெற்ற மாவட்ட தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய கம்யூ. கட்சி சாா்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:40 pm

DIN

 புதுகையில் நடைபெற்ற மாவட்ட தொழில்நுட்பக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க இந்திய கம்யூ. கட்சி சாா்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை என அதன் தேசியக் குழு உறுப்பினா் மு. மாதவன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் 2021- 2022 ஆண்டுக்கு மாவட்டத்தில் பயிரிடப்படும் பயிா்களுக்கான கடன் அளவு, கால்நடை மற்றும் மீன் வளா்ப்பு நடைமுறை மூலதனக் கடன் அளவு நிா்ணயம் பற்றி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தலைமையில், வேளாண் இணை இயக்குநா், நபாா்டு மேலாளா், கோத்தாரி சா்க்கரை ஆலை கரும்பு மேலாளா், வங்கியாளா்கள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத் தலைவா்களும் கலந்து கொண்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து, போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு விவசாய சங்கத்துக்கு அழைப்புவிடுக்கவில்லை. எங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு கொடுக்காமல் இருப்பது சரியல்ல; இது சரியான நடைமுறையாக இருக்காது. கூட்டத்தின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டால் உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.