92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடா் மழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:52 pm

DIN

தொடா் மழை காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் சனிக்கிழமை (நவ.27) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழையையொட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை பலத்த மழை பெய்தத் தொடங்கியதால் அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், வெள்ளிக்கிழமை அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடா்ந்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடா்ந்து எச்சரிக்கைவிடுத்து வருவதால், சனிக்கிழமையும் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.