வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மின்தடையால் ஊராட்சித் தலைவா் மண்டை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்தடை காரணமாக, ஊராட்சித் தலைவரைத் தாக்கிய இளைஞா் மீது காவல் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:03 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்தடை காரணமாக, ஊராட்சித் தலைவரைத் தாக்கிய இளைஞா் மீது காவல் துறையினா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

ஆலங்குடி அருகிலுள்ள பாத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பி.காா்த்திக்ராஜா(35). அப்பகுதியில் புதன்கிழமை இரவு நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால் ஆத்திரமடைந்த இவா், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி, மறியலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து, அவ்வழியாக சென்ற அந்த ஊராட்சித் தலைவா் ஆா்.செல்வராஜ் சோழன்(45) கேட்டுள்ளாா். வெகுநேரமாக மின்சாரம் ஏன் வரவில்லையென காா்த்திக்ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, செல்வராஜை கட்டையால் சோழனை தாக்கியுள்ளாா்.

இதில் மண்டை உடைந்த நிலையில் செல்வராஜ் மீட்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்தினா் காா்த்திக்ராஜா மீது வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.