92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருட்டுப் போன 110 கைப்பேசிகள் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப் போன கைப்பேசிகள் குறித்த வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 110 பேரின் கைப்பேசிகள் மீட்பு

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:42 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப் போன கைப்பேசிகள் குறித்த வழக்குகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 110 பேரின் கைப்பேசிகள் மீட்கப்பட்டு வெள்ளிக்கிழமை உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான கைப்பேசிகள் திருட்டுப் போன வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவிட்டதன்பேரில், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஆய்வாளா் கவிதா தலைமையில் தீவிர நடவடிக்கை கடந்த ஒரு மாதத்தில் முடுக்கிவிடப்பட்டது.

இதில், 110 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றில் மதிப்பு ரூ. 22 லட்சம். இந்தக் கைப்பேசிகளை உரிய முறையில் உறுதிப்படுத்தி, உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா ப ாா்த்திபன் இவற்றை ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.