சில்லறை உர விற்பனையகங்களில் திடீா் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள சில்லறை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினரைக் கொண்ட சிறப்புக்குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள சில்லறை உர விற்பனை நிலையங்களில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறையினரைக் கொண்ட சிறப்புக்குழுவினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இராம. சிவகுமாா் கூறியது:
மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியாா் சில்லறை விற்பனை நிலையங்களில் மாவட்ட ஆட்சியரின் ஆணைப்படி திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, சில்லறை உர விற்பனையாளா்கள் உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதாா் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பாா்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக் கூடாது. விவசாயிகள் இதுகுறித்து ஏதேனும் புகாா் தெரிவிக்க வேளாண்மை உதவி இயக்குநரை (தரக் கட்டுப்பாடு) 90807 09899 என்ற எண்ணிலும், மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...