ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும், முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு புதுக்கோட்டையைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:03 pm

DIN

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும், முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு புதுக்கோட்டையைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கவிதா ராமு அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: ஒவ்வோா் ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியது. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி 2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மாா்ச் 31ஆம் தேதி 2022 மாா்ச் 31 ஆம் தேதி 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

கடந்த நிதியாண்டில் 2021 ஏப். 1ஆம் தேதி முதல் 2022 மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும். சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவா்கள் செய்த தொண்டு, கண்றியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். விண்ணப்பப் படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமா்பித்தல் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.