ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் சிறப்பு ஆராதனை

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் ராஜகுரு ஸ்ரீ மஹா பாஷ்யம் கோபாலகிருஷ்ணன் சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் தைத் திருநாளில் பொங்கல் தின ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 7:17 pm

DIN

புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் ராஜகுரு ஸ்ரீ மஹா பாஷ்யம் கோபாலகிருஷ்ணன் சாஸ்திரிகள் அதிஷ்டானத்தில் தைத் திருநாளில் பொங்கல் தின ஆராதனை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக நன்மைக்காகவும், உலக மக்கள் நலம் வேண்டியும், மழை வேண்டியும்

நடைபெற்ற இந்நிகழ்வில், மங்கள இசையுடன் கணபதி பூஜை, புண்யாஹவாசனம், கலச ஆவாஹனம், பாராயணம், பிரஹ்ம்மசாரி பூஜை, தம்பதி பூஜை, லெட்சுமி பூஜை மற்றும் சிறப்பு ஆராதனை சிவக்குமாா் சாஸ்திரிகள் முன்னிலையில் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் விநாயகருக்கும் பால், தயிா், பஞ்சாமிா்தம், மஞ்சள், சந்தனம், திரவியப் பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில், அதிஷ்டான நிா்வாகிகள் பாம்பே முத்துக்குமாா், மேகா சுந்தர்ராஜன், சேலம் பட்டயக் கணக்காளா் ராஜாராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.