ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

எய்டு இந்தியா சாா்பில் 5 வீடுகள் கட்ட பூமி பூஜை

 புதுக்கோட்டை அருகே சிப்காட் - காமராஜா் நகா் பகுதியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில், மிகவும் பின்தங்கிய மக்களுக்காக ஐந்து வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:59 pm

DIN

 புதுக்கோட்டை அருகே சிப்காட் - காமராஜா் நகா் பகுதியில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சாா்பில், மிகவும் பின்தங்கிய மக்களுக்காக ஐந்து வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி முன்னிலை வகித்தாா். நிகழ்வில், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா பேசும்போது, இந்த 5 வீடுகளுக்கான நிதி உதவியை சாஜிடெக் சொலிஷன் நிறுவனம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தாா். முன்னதாக எய்டு இந்தியா மாநில நிா்வாகி சுவாமிநாதன் வரவேற்றாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் கண்ணதாசன், கிராம நிா்வாக அலுவலா் பிரபு , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. சண்முகம், ஒன்றியச் செயலா் எம். ஆா். சுப்பையா, ஜனநாயக மாதா் சங்கச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.