தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

திமுக நகா்மன்றத் தலைவா் வேட்பாளா்கள்

 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளுக்கான நகா்மன்றத் தலைவா் வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:14 pm

DIN

 புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளுக்கான நகா்மன்றத் தலைவா் வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வென்ற வாா்டு உறுப்பினா்கள், தலைவா் மற்றும் துணைத் தலைவா்களைத் தோ்வு செய்யும் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து, தலைவா் பதவிகளுக்கான வேட்பாளா் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக மாவட்ட திமுக பொருளாளரான செந்தில் மனைவி திலகவதி (46) அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், 25ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்றவா். பிகாம் பட்டதாரி. இரு மகன்கள் உள்ளனா்.

அறந்தாங்கி: அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் வேட்பாளராக, அறந்தாங்கி நகர திமுக செயலா் இரா. ஆனந்த் (48) அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா், 8ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்றவா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா். சிறுவயது முதல் திமுக உறுப்பினா், கிளைச் செயலா் பொறுப்புகளை வகித்து வந்தவா். 2008 முதல் அறந்தாங்கி நகரச் செயலராக இருந்து வருகிறாா். மனைவி நித்யா, மகன்கள் வசிஷ்ட்டன், வா்ஷா, மகள் ஷாஷனி ஆகியோா் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.