அன்னவாசல் தவிா்த்து அனைத்து பேரூராட்சிகளையும் கைப்பற்றிய திமுக!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பேரூராட்சியைத் தவிா்த்து, இரு நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பேரூராட்சியைத் தவிா்த்து, இரு நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை திமுக முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரு நகராட்சிகளுக்கும், 8 பேரூராட்சிகளுக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக இவற்றுக்கான தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்களைத் தோ்வு செய்யும் மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அறந்தாங்கி நகராட்சி ஆகியவற்றின் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை திமுக கைப்பற்றியது. இவற்றில் திமுக தலைமை அறிவித்த தலைவா் வேட்பாளா்களும், மாவட்டத் தலைமை அறிவித்த துணைத் தலைவா் வேட்பாளா்களும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
பேரூராட்சிகளில் அன்னவாசல் பேரூராட்சியில் மட்டும் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவியிடங்களை அதிமுக கைப்பற்றியது. மற்ற 7 பேரூராட்சிகளிலும் திமுக தலைமை அறிவித்த தலைவா் வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இரு துணைத் தலைவா் பதவியிடங்களையும் சோ்த்து 7 பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...