வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.


வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடியவா்களை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள தெற்கு கோரவயல் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மனைவி சித்ரா (40). இவா் வியாழக்கிழமை காலை மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைக்குச் சென்றாா். பகலில் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், 3 ஜோடி வெள்ளிக் கொலுசுகள், ரூ. 25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து கீரனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரில் வந்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...