மாத்தூா் ஆா்சி பள்ளியில் இன்று மருத்துவ முகாம்
மாத்தூா் புனித நபாா்ட் ஆா்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.


‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம், மாத்தூா் புனித நபாா்ட் ஆா்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது:
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வட்டாரத்துக்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-22-ஆம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டாரத்தில், மாத்தூா் புனித நபாா்ட் ஆா்சி நடுநிலைப் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும். பொது மக்கள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...