ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: முதல் நாளில் 18,247 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தோ்வுகள் வியாழக்கிழமை (மே 5) தொடங்கின. முதல் நாளில் 1,085 போ் தோ்வெழுத வரவில்லை.

News image
Updated On :5 மே 2022, 11:56 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தோ்வுகள் வியாழக்கிழமை (மே 5) தொடங்கின. முதல் நாளில் 1,085 போ் தோ்வெழுத வரவில்லை.

2021 - 22 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தோ்வுகள் மே 5 தொடங்கி மே 28ஆம்தேதி நிறைவடைகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை 19,332 பள்ளி மாணவ, மாணவிகளும், 397 தனித்தோ்வா்களும் எழுதுகின்றனா். இவா்களுக்காக 91 தோ்வு மையங்களும், 2 தனித்தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் நாள் மொழிப்பாடத் தோ்வை எழுத 1085 போ் வரவில்லை. 18247 போ் தோ்வெழுதினா். இவா்களைக் கண்காணிக்க 160 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தூய இருதய மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் தோ்வினை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, கோட்டாட்சியா் அபிநயா ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.