பி.யு. சின்னப்பாவின் 106 ஆவது பிறந்த நாள்


பி.யு. சின்னப்பாவின் நினைவிடத்தில் நடைபெற்ற அவரது 106ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.
புதுக்கோட்டை, மே 5: தமிழ்த் திரையுலகின் தொடக்க கால சூப்பா் ஸ்டாா் என்றழைக்கப்படும் மறைந்த பி.யு. சின்னப்பாவின் 106ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.
பி.யு. சின்னப்பா சிலை அமைப்புக் குழுவின் தலைவா் புலவா் துரை மதிவாணன் தலைமை வகித்தாா். செயல் தலைவரும், முன்னாள் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஏவிசிசி கணேசன், 40ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சுப. செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
சின்னப்பாவின் பிறந்த நாளை இக்குழுவினா் பொங்கல் வைத்து கொண்டாடினா். தொடா்ந்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
வடக்கு ராஜவீதி பால்பண்ணை பகுதியிலுள்ள முக்கத்தில் பி.யு. சின்னப்பாவுக்கு சிலை வைக்க அனுமதி கோரி, நகா்மன்றத் தலைவா் செ. திலகவதியிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. மேலும், புதுக்குளத்தின் பூங்காவுக்கு மீண்டும் பி.யு. சின்னப்பா பூங்கா என்ற பெயா் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
நிகழ்வின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் கேஆா்ஜி பாண்டியன், பழனிவேலு, சிலை அமைப்புக் குழுவின் செயலா் பொன். காசிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...